ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் கருப்பின நடிகர்- சமூக வலைதளத்தில் எதிர்ப்பு

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      சினிமா
James Band  black actor 2018 08 18

நியூயார்க், ஹாலிவுட் சினிமாவில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முறையாக கறுப்பினத்தைச் சேர்ந்த நடிகர் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என காலத்திற்கு தகுந்தவாறு முன்னணியில் இருக்கும் பிரபலமான நடிகர்கள் நடித்தனர்.

இதற்கு முன் வெளியான நான்கு ஜேம்ஸ் பாண்ட் படத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார். தற்போது 25-வது ஜேம்ஸ் பாண்ட் படம் உருவாகவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர் டேனி பாயல் இயக்கவுள்ளார்.
 
இந்த நிலையில், அடுத்த 25-வது ஜேம்ஸ்பாண்டாக  கறுப்பின நடிகர் ஒருவர் நடிக்கச் சரியான நேரம் இதுவே என்று நடிகர் இட்ரிஸ் எல்பா கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது குறித்து மக்கள் பலரும் பல விதமான கருத்துக்களை வெளியிட்டனர். பெருபாலானோர் இனவெறியை தூண்டும் விதமாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். கறுப்பினத்தவர் ஒருவர் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க தகுதியற்றவர் என்றும், இவர் மிகவும் வயதானவர் என்றும் மக்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து