முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன்: மோடி பெருமிதம்

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், மழைக்கும், வெள்ளத்துக்கும் எதிராக மீண்டு வரும் கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாநிலத்தில் பெருமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஏறக்குறைய 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. மழை வெள்ளத்துக்கும், நிலச்சரிவுக்கும் இதுவரை 320-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர், ஏராளமானோரைக் காணவில்லை. 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை பிரதமர் மோடி, தனி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அவருடன் முதல்வர் பினராயி விஜயன், நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ஆளுநர் பி. சதாசிவம் உள்ளிட்டோர் உடன் சென்றனர். அதன்பின் டுவிட்டரில் பிரதமர் மோடி கேரள மக்கள் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

கேரள மாநிலத்தில் பெய்த பெருமழை, அதனால் ஏற்பட்ட மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவிக்கிறேன். கேரள மாநிலத்துக்கு அனைத்து விதமான உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். நிதி உதவி, உணவு தானியம், மருந்துகள் ஆகியவற்றைத் தேவைக்கு ஏற்றார்போல் வழங்கும். வெள்ளம், மழை பாதிப்புகளை எதிர்த்துப் போராடி வரும் கேரள மக்களின் போராட்டக் குணத்துக்கு தலைவணங்குகிறேன். இதுபோன்ற நெருக்கடியான சூழலில் மக்களும், அதிகாரிகளும் இணைந்து செயல்படுவதைப் பாராட்டுகிறேன். இதுபோன்ற இக்கட்டான சூழலில் நாடு முழுவதும் கேரள மாநிலத்தை நோக்கி உதவிகள் குவிந்து வருவதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து