முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கனடா வீரர் ராவ்னிக் காலிறுதிக்கு தகுதி

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

சின்சினாட்டி : சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் காலிறுதிக்கு முன்னேறினார்.

கார்ரினோ பஸ்தா...

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் 7-6 (8-6), 6-4 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதிபெற்றார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் பாப்லோ கார்ரினோ பஸ்தா (ஸ்பெயின்) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ்சை வீழ்த்தி காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

ஸ்லோனே ஸ்டீபன்ஸ்...

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீராங்கனையுமான ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-7 (8-10), 2-6 என்ற நேர்செட்டில் 15-ம் நிலை வீராங்கனையான எலிஸ் மெர்டென்சிடம் (பெல்ஜியம்) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-7 (3-7), 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ்சிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

காலிறுதிக்குள்...

இன்னொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியாவை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். கிவிடோவா (செக் குடியரசு), லிசி சுரென்கோ (உக்ரைன்) ஆகியோரும் வெற்றி பெற்று காலிறுதியை எட்டினர். மழையால் பாதிக்கப்பட்டு தொடர்ந்த 2-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா தாம்ஜனோவிக்கை சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மழை காரணமாக சில ஆட்டங்கள் தள்ளிவைக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து