ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      உலகம்
Kofi Annan 2018 8 19

ஐ.நா : ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80.

உடல்நலக் குறைவு காரணமாக கோபி அன்னன் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரும், அவரது அறக்கட்டளை அமைப்பும் தெரிவித்துள்ளது. இது குறித்து கோபி அன்னனின் டுவிட்டர் பக்கத்தில் அவரது அறக்கட்டளை சார்பாக ,

ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொதுச் செயலாளரான கோபி அன்னன் ஆகஸ்ட் 18-ம் தேதி உடல்நலக் குறைவினால் அவரது உயிர் அமைதியாகப் பிரிந்தது. கோபி அன்னா என்றும் நம் மனதில் நிலைத்திருப்பார் என்று பதிவிடப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் 7-வது பொதுச் செயலாளாராக இருந்த கோபி அன்னன் 1997 முதல் 2006 வரை அந்தப் பதவியில் வகித்தார். கானாவைச் சேர்ந்த கோபி அன்னன் சிரியாவுக்கு சிறப்பு தூதராகப் பணியாற்றியவர்.

ஆப்பிரிக்கா நாடுகளில் எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதற்காகவும், அவருடைய மனிதாபிமான சேவைகளைப் பாராட்டும் வகையில் 2001-ம் ஆண்டு அமைத்திக்கான நோபல் பரிசு கோபி அன்னனுக்கு வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பினத் தலைவர் கோபி அன்னன் ஆவார். அப்பதவிக்காக அவர் இருமுறை தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து