முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் யாத்திரை: சவூதி சென்ற 1.28 லட்சம் இந்தியர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

சவுதி : ஹஜ் யாத்திரையை ஒட்டி, 1.28 லட்சத்துக்கும் அதிகமான இந்திய முஸ்லிம்கள் சவூதி அரேபியா சென்றனர்.

அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஹஜ் குழு, ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 466 விமானங்கள் மூலம் பல குழுக்களாக 1. 28 லட்சம் யாத்ரீகர்கள் சவூதிக்கு அனுப்பப்பட்டனர். யாத்திரை செல்வதற்கான கடைசி குழு கடந்த வெள்ளியன்று இந்தியாவில் இருந்து புறப்பட்டது. அரசு அனுப்பி வைத்த குழுவினரோடு சேர்த்து இந்த ஆண்டு மொத்தம் 1. 75 லட்சம் இந்திய முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரைக்கு செல்கின்றனர். அதில் 47 சதவீதம் பேர் பெண்கள்.  இந்த ஆண்டு முதல் முறையாக ஆண் துணையின்றி யாத்திரை மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர், ஹஜ் யாத்திரை செல்லும் பெண், ஆண் துணையின்றி செல்லக் கூடாது என்ற விதி இருந்தது. மானியம் ஏதும் இன்றி யாத்ரீகர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து