முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கை நதியில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு - ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

டேராடூன் : உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வாஜ்பாயின் அஸ்தி நேற்று கரைக்கப்பட்டது. இதில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள புண்ணிய நதிகளில், மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அஸ்தி 19-ம் தேதி கரைக்கப்பட இருப்பதாக பா.ஜ.க அறிவித்தது. அதை தொடர்ந்து நேற்று வாஜ்பாயின் அஸ்தி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதியில் கரைக்கப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

டெல்லியில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்து கட்சி பிராத்தனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து