முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

113 கிரிமினல் வழக்கில் தொடர்புடைய 62 வயது பெண் டெல்லியில் கைது

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 113 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 62 வயது பெண்ணை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.

தெற்கு டெல்லியில் உள்ள சங்கம்விஹார் பகுதியில் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் இந்த பெண்ணை தேடி வந்த நிலையில், தனது உறவினர்களைப் பார்க்க மாறுவேடத்தில் வந்த இந்தப் பெண்ணை கைது செய்தனர். அந்தப் பெண்ணின் பெயர் பாசிரன் என்றும், தேடப்படும் குற்றவாளியாக டெல்லி போலீசாரால் கடந்த 8 மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கம் விஹார் பகுதியில் ஒரு காலத்தில் மிகப்பெரிய டானாக வலம் வந்த பாசிரன், தனது மகன்களின் உதவியுடன் அரசின் ஆழ்குழாய் கிணறுகளை எல்லாம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அதில் இருந்து தண்ணீரைத் திருடி பல்வேறு இடங்களுக்குச் சட்டவிரோதமான வகையில் விற்பனை செய்து மக்களுக்கு இடையூறு செய்து வந்துள்ளார். அப்போது போலீசார் பாசிரனைக் கைது செய்ய முயலவே அங்கிருந்து தப்பி, அலகாபாத், அகமதாபாத், மெயின்பூரி, பெரோசாபாத் உள்ளிட்ட இடங்களில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டெல்லி தெற்கு போலீஸ் உதவி ஆணையர் கூறியதாவது,

ஆட்கடத்தல், கொலை, திருட்டு, கொள்ளை, கும்பல்வைத்து கொலை செய்தல், நகைபறித்தல் உள்ளிட்ட 113 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 62 வயது மூதாட்டி பாசிரன். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் பாசிரன் போலிஸில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு சங்கம் விஹார் பகுதியில் உள்ள வனப்பகுதியில் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக 4 பேரைக் கைது செய்த நிலையில், பாசிரன் மட்டும் சிக்காமல் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவரின் உறவினர்கள் வீட்டுக்கு மாறுவேடத்தில் வந்த போது, போலீசாரிடம் பாசிரன் சிக்கினார். இவ்வாறு பானியா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து