திருமங்கலம் ரோட்டரி கிளப் சார்பில் இலவச மருத்துவ முகாம்:

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      மதுரை
tmm news

திருமங்கலம்-திருமங்கலம் ரோட்டரி கிளப் சார்பில் 2018-19-ம் ஆண்டின் மகிழ்ச்சி கிராம திட்டத்தின் கீழ் க.ராஜாராம் நாயுடு பாரா மெடிக்கல் கல்லூரியுடன் இணைந்து ராயபாளையம் கிராமத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் சிறப்புடன் நடைபெற்றது.
ரோட்டரி மாவட்டம் 3000-த்தின் ஒரு அங்கமான திருமங்கலம் ரோட்டரி கிளப் சார்பில் 2018-19-ம் ஆண்டின் மகிழ்ச்சி கிராம திட்டத்தின் கீழ் மாபெரும் மருத்துவ முகாம் ராயபாளையம் கிராமம் அருள்மிகு எல்லம்மாள் அம்மன் கோவில் மீட்டிங் ஹாலில் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.க.ராஜாராம் நாயுடு பாரா மெடிக்கல் கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் டாக்டர்.செல்வராஜ்,டாக்டர்.மாதவன் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவ மனையின் மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட 25பேர் கொண்ட கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர்.அப்போது ராயபாளையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு சிகிச்சைகளும்,சிறப்பு ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன் மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை திருமங்கலம் ரோட்டரி கிளப் தலைவர் எம்.பொன்னம்பலம், செயலாளர் வி.பி.ராதாகிருஷ்ணன்,பொருளாளர் என்.தேவராஜ்,க.ராஜாராம் நாயுடு பாரா மெடிக்கல் கல்லூரியின் செயலாளர் டாக்டர்.ராமகிருஷ்ணன்,துணைச் செயலாளர் தேவராஜ் மற்றும் நிர்வாகிகள் சிறப்புடன் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து