முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை - துணை முதல்வர் ஓ.பி.எஸ். திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

தேனி : முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க மாட்டோம் என்றும் அணையின் நீர்மட்டத்தை குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக பெய்து வந்த பலத்த மழையால், தேனி மாவட்டம் லோயர்கேம்ப் - குமுளி மலைச்சாலை துண்டிக்கப்பட்டு, 4 நாள்களாக போக்குவரத்து பாதித்துள்ளது. இந்தச் சாலைகளை சீரமைக்கும் பணிகளை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக, காவிரி தொழில் நுட்பக் குழுவினர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதனால் கேரள மக்கள் அச்சப்பட தேவையில்லை. அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க கேரளம் கோரிக்கை வைத்தது. ஆனால் 142 அடியாக உள்ள அணையின் நீர்மட்டத்தை குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. கேரள மக்களுடன் நாம் சகோதரத்துவத்துடன் இருக்கிறோம். அவர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால், அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். கேரளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்த்து உதவிகளை செய்து வருகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து