முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலியார் சாஹிப் தர்ஹா உற்சவவிழாவையொட்டி கிடாமுட்டு சண்டை -மாட்டுவண்டிப்பந்தயம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

கடலாடி-     கடலாடி அருகே அலியார் சாஹிப் தர்ஹா உற்சவவிழாவை முன்னிட்டு  கிடாமுட்டு சண்டைமற்றும் மாட்டு வண்டிப்பந்தயம் நடைபெற்றது. 
 இராமநாதபுரம் மாவட்டம் கடலாhடி தாலுகாவவைச்சேர்ந்த சாத்தங்குடி ஆலங்குளம் கிராமத்தில் அலியார் சாஹிப் தர்ஹா உள்ளது. பழமை வாய்ந்த இந்த தர்ஹாவில் சுற்றுவட்டார அனைத்து சமுதாய கிராமமக்களும்  தெய்வமாக வணங்கி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் அலியார் சாஹிப் தர்ஹாவின் உற்சவ விழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.  இதில் இந்து முஸ்லிம் மற்றும் கிருஸ்தவர்கள் என அனைவரும் சாதிமத பாகுபாடுகள் இன்றி கொண்டாடி வருகின்றனர்.
   இந்த ஆண்டும் அலியார் சாஹிப் தர்ஹாவின்  உற்சவவிழா கடந்த 17ந்தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற திருவிழாவில் ஆடல் பாடல் - நாடகம் போன்ற கலை நிகழ்ச்சியும் கிடா முட்டு சண்டை மாட்டுவண்டிப்பந்தயம் மற்றும் பொது அன்னதானமும் நடைபெற்றன. கிடா முட்டு சண்டையில் 37 ஜோடி கிடாயும் மாட்டுவண்டிப்பந்தயத்தில் சின்ன மாடு பெரியமாடு என பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 12 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன.  இந்நிகழச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலாடி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில்  செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சாத்தங்குடி ஆலங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.இந்நிகழச்சியில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து