முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை அணை நிரம்பியதால், 10 ஆண்டுகளுக்கு பின் உபரி நீர் திறப்பு.

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி -      ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து 69அடியைத் தாண்டியதால் , 2008 ஆம் ஆண்டுக்கு பின் உபரி நீர் ஆற்றில் திறந்த விடப்பட்டது.
        தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்வதாலும், பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் , ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டு 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் உயர்ந்து தற்போது 69 அடியாகி உள்ளது.
         கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் உயரம் 142 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 12831 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 2200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு  4831மில்லியன் கன அடியாக உள்ளது.
        வைகை அணைக்கு வினாடிக்கு 3333கன அடி நீர்  வருகிறது. 6091 மில்லியன் கன அடி கொள்ளவு உள்ள நீர் தேக்கப் பகுதியில் தற்போது 5476 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
      இந்நிலையில் வைகை அணை நீர்மட்டம் நேற்று மதியம் 3.15 மணியளவில் 69 அடியானது. இதனையடுத்து அணைக்கு உபரியாக வரும் 3333 கன அடி  தண்ணீர் மேல் மதகுகள் வழியாக ஆற்றில் திறக்கப்பட்டது. இதனை நிர்வாகப் பொறியாளர் சுப்பிரமணி இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி மேல் மதகுகள் வழியாக தண்ணீரை திறந்து வைத்தார். தண்ணீர் ஆர்பரித்து வெளியேறியது கண்கொள்ளாத காட்சியாக இருந்தது. 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த 2008லும் அதற்கு பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
       இதனையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, பெரியகுளம் கோட்டாட்சியர் ஜெயப்பிரிதா மற்றும் அரசு உயரதிகாரிகள் வைகை மேல் மதகுகளில் பீறிட்டு வெளியேறுவதை பார்வையிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து