கேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ 35 லட்சம் நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      சினிமா
Vikram 2016 12 08

சென்னை : கேரளாவில் நிகழ்ந்துள்ள வரலாறு காணாத வெள்ள சேதத்திற்கு தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் ரூ 35 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

"கடவுளின் தேசம்" என்று அழைக்கப்பட்ட கேரள மாநிலம், தற்போது வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அவதிப்பட்டு வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் பெய்யாத மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஏறக்குறைய ரூ. 20 ஆயிரம் கோடியளவுக்கு இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கேரள வெள்ள சேதத்திற்கு தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் ரூ 35 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து