முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவுடன் ஒட்டு மொத்த நாடும் துணை நிற்கும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கேரளாவுடன் ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் வீடு, வாசல் மற்றும் உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆலுவா, சாலக்குடி, செங்கன்னூர், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கேரள கவர்னர் பி.சதாசிவம், முதல்வர் பினராய் விஜயன் ஆகியோருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆலோசித்தார். அப்போது, இந்த இக்கட்டான சூழலிலும் மனஉறுதியுடன் இருக்கும் கேரள மக்களை பாராட்டினார். மேலும் கேரளாவுடன் ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

வெள்ள பாதிப்பு தொடர்பான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருவதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் ஆகியோர் இத்தருணத்தில் துரிதமாக செயல்பட்டு வருவதை பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து