தென்கொரியாவில் முதல் முதலாக காது கேளாதவர்கள் இணைந்து நடத்தும் டாக்சி நிறுவனம் துவக்கம்

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      உலகம்
taxi 2018-08-20

சியோல், தென் கொரியா, சியோலில் காது கேளாத ஓட்டுநர்கள் இணைந்து வாடகை கார் சேவையை முதல் முதலாக ஆரம்பித்துள்ளனர்.

தனியார் நிறுவனமான கோயக்டஸ் உருவாக்கிய மென்பொருள் கருவியின் மூலம் இந்த காது கேளாத ஓட்டுநர்கள் உதவி பெறுகின்றனர்.

இதை வைத்து அவர்கள் இயல்பாக வாகனம் ஓட்டுகிறார்கள்.

வாடகை காரின் முன்னும் பின்னும் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு கணினிகள் மென்பொருளோடு இணைக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் பேசும் வார்த்தைகளை எழுத்து வடிவில் மாற்றுகின்ற வசதியை இந்த மென்பொருள் கொண்டுள்ளது.

பயணியர் எங்கு செல்ல வேண்டும், எங்கு இறங்க வேண்டும் என்று சொல்வதை இது மொழி பெயர்க்கும்.

கணினி பொறியாளர் பட்டம் பெற்றுள்ள சொங் மின்-பியோவின் தலைமையில் சோல் நகரிலுள்ள மாணவர்கள் குழு இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளது.

காது கேளாதவர்களின் நலன் கருதி அவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர விரும்பியதாக சொங் கூறியுள்ளார்.

தென் கொரியாவில் மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் காது கோளாதோர் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் இந்த வசதியால் நிறைய காது கோளாதோர் வாழ்க்கை பயனடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து