தன் பிரசவத்திற்காக மருத்துவ மனைக்கு சைக்கிளை ஓட்டி சென்ற நியுசிலாந்து அமைச்சர்

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      உலகம்
NewZealand Minister 2018-08-20

வெலிங்டன்,நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நியூசிலாந்தின் பெண் மத்திய அமைச்சர் ஜூலி அன்னே ஜென்டெர், தன் பிரசவத்திற்காக தன்னுடைய மிதிவண்டியை தானே ஓட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது .

இந்த சம்பவத்தை குறித்து, ஜூலி ஜெண்டேர், காரில் போதுமான இடம் இல்லை என்பதால் சைக்கிளில் சென்றதாக கூறியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராமில் தானும், தனது கணவரும் மிதிவண்டியில் பயணித்த புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இது உலகம் முழுக்க வைரலாகி அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கடந்த ஜூன் மாதம் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த நியூசிலாந்தின் பிரதமர் ஜெஸிந்தா அடேர்ன், ஒரு நாட்டின் பிரதமராக பணியில் இருந்த போதே குழந்தையை பெற்ற உலகின் இரண்டாவது தலைவர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த நிலையில்தான் ஜூலி அன்னே ஜென்டெர் குழந்தை பெற்றுள்ளார்.

38 வயதாகும் ஜெண்டேர் அந்நாட்டின் போக்குவரத்துத்துறை துணையமைச்சராக பணியாற்றுகிறார்.

இவர் ஒரு சைக்கிள் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து