முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனவரியில் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சந்திராயன்-2 விண்கலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:

இந்தியாவின் சார்பில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-க்குள் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திட்டம். இதன்மூலம் இளைஞர்களுக்கு உத்வேகம் கிடைக்கும். இதனை சவாலாக எடுத்துக்கொண்டு கடுமையாக உழைத்து வருகிறோம்.

மேலும், மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 40 ராக்கெட்டுகளை உருவாக்குவதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கானப் பணிகளையும் இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

நிலவை ஆய்வு செய்ய இந்த ஆண்டில் அனுப்பப்பட இருந்த சந்திராயன்-2 விண்கலம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சில மாற்றங்கள் மற்றும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது 2019 ஜனவரியில் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் வரும் செப்டம்பர் 15 அல்லது 16-ஆம் தேதிகளில் விண்ணில் ஏவப்பட உள்ளது என்றார் இஸ்ரோ தலைவர் சிவன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து