முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்ப்பிணி பெண்ணை பாதுகாப்பாக மீட்டதற்காக வீட்டின் மாடியில் தேங்க்ஸ் என எழுதி நன்றி தெரிவித்த கேரள மக்கள்

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், கேரள வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்ணை பாதுகாப்பாக மீட்ட விமானப்படை வீரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த வீட்டின் மொட்டை மாடியில் ஆங்கிலத்தில் வெள்ளை பெயிண்ட்டால் தேங்க்ஸ் என்று எழுதி கேரள மக்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 10 நாட்களாக மழை பெய்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். 

கடந்த இரு நாட்களுக்கு முன், ஆலுவா நகரம் அருகே, செங்கமநாடு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் உதவிக்காக குரல் எழுப்பியவாறு நிறைமாத கர்ப்பிணியான சஜிதா பபில் நின்று கொண்டிருந்தார்.


இதை பார்த்த ஹெலிகாப்டரில் இருந்த மீட்புப் படையினர் அந்தப் பெண்ணை மீட்கும் பணியில் இறங்கினார்.

ஆனால், அந்த வீட்டில் மாடியில் இறங்கிய பின்புதான் அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணி என்பதும், பனிக்குடம் உடைந்தநிலையில் தவித்து வந்தார் என்பதும் தெரியவந்தது.

அந்தப் பெண்ணை பாதுகாப்பாகக் கடற்படை வீரர் விஜய் வர்மா மீட்டார்.

அந்த வீட்டில் இருந்த மற்றொரு பெண்ணையும் மீட்டனர்.

அதன்பின் சஜிதா பபில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சஞ்சீவானி கடற்படை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அந்த வீட்டில் உள்ளவர்கள் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில், வெள்ளை பெயிண்ட்டால் ஆங்கிலத்தில் தேங்க்ஸ் (நன்றி) என்று எழுதி தங்களின் நன்றியைத் தெரிவித்தனர்.

இதுகுறித்து இந்திய விமானப்படையினர் டுவிட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், கர்ப்பிணிப் பெண்ணையும் மற்றொரு பெண்ணையும் மீட்ட கமாண்டர் விஜய் சர்மாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த வீட்டின் மொட்டை மாடியில் தேங்ஸ் என்று எழுதப்பட்டுள்ளது நெகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து