முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேமிப்புப் பணம் ரூ. 8 ஆயிரத்தை கேரளாவுக்கு வழங்கிய சிறுமி புதிய சைக்கிள் வழங்குகிறது ஹீரோ நிறுவனம்

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

விழுப்புரம்,நான்கு ஆண்டுகளாக ஆசை ஆசையாக சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த பணம் ரூ.8 ஆயிரத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளித்த சிறுமிக்குப் பாராட்டு குவிகிறது.

அவருக்கு புது சைக்கிள் வழங்க ஹீரோ சைக்கிள் நிறுவனம் முன் வந்துள்ளது.

விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவ சண்முகநாதன். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு 8 வயதில் மூன்றாம் வகுப்பு படிக்கும் அனுப்பிரியா என்ற மகள் உள்ளார்.

இவருக்கு சைக்கிள் ஓட்டவேண்டும் என்று கொள்ளை ஆசை. இதற்காக பெற்றோர் அவ்வப்போது தரும் பணத்தை சிறுமி உண்டியலில் சேமித்து வந்தார்.

வரும் அக்டோபர் 16-ம் தேதி வரும் பிறந்த நாளன்று புது சைக்கிள் வாங்கி ஓட்ட வேண்டும் என சிறுமி அனுப்ரியா காத்திருந்தார்.

இந்நிலையில் கேரளாவில் மழை வெள்ளம், நிலச்சரிவு காரணமாக கேரள மக்கள் படும் இன்னல்களை தொலைக்காட்சிகளில் பார்த்து சிறுமி துயரமடைந்தார்.

தானும் மற்றவர்களைப்போல் கேரள மக்களுக்கு உதவ வேண்டும் என நினைத்து தந்தையிடம் கூறினார்.

தனது சேமிப்பில் வைத்திருந்த பணம் ரூ. 8 ஆயிரத்தை நிவாரணமாக அளித்து விடலாம் என்று சிறுமி கூற தந்தை நெகிழ்ந்து போனார்..

இதையடுத்து எட்டாயிரம் ரூபாய் பணத்தை சிறுமி தனது தந்தையிடம் ஒப்படைத்து அது வங்கி வரைவோலை மூலம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தத் தகவல் வெளியில் பரவ சிறுமியின் குணத்தை அனைவரும் நெகிழ்ந்து போயினர்.

இதனிடையே ஹீரோ சைக்கிள் நிறுவனம் அனுப்ரியாவின் சேவை மனப்பான்மையைப் பாராட்டி அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் ஒரு புதிய சைக்கிள் பரிசளிக்கப்படும் என்று ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக மேலாளருமான பங்கஜ் முன்ஜல் தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதுபோன்று அனுப்ரியாவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து