மதுரை மாநகர் அம்மா பேரவையின் சார்பில் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் சூளுரை

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      மதுரை
20 NAGOOR 01  news

மதுரை -    மதுரை மாநகர் அம்மா பேரவையின் சார்பில் 1லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு என்று மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.சரவணன் ஆலோசனைக்கூட்டத்தில் சூளுரை ஏற்று பேசினார்.
    மறைந்த முதல்வர் அம்மாவின் நல்லாசியுடன் முதலமைச்சர், துணைமுதலமைச்சரின் ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு 3 - ம் பகுதி செயலாளர் ஏ.கே.முத்துஇருளாண்டி தலைமை தாங்கினார். மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் பா.வெற்றிவேல் முன்னிலை வகித்தார், தெற்கு 2-ம் பகுதி கழக செயலாளர் வி.கே.எஸ்.மாரிச்சாமி வரவேற்புரை ஆற்றினார்.
    இக்கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் இரா.முருகேசன், ஓ.எஸ்.அமர்நாத், ராஜாசீனிவாசன், புதூர் அபுதாகீர் மற்றம் சப்னா தினேஷ், வட்ட கழக செயலாளர்கள் முனிச்சாலை சரவணன், கார்மேகம், பதினெட்டான், தனசேகரன், ஜெயக்குமார், ஜீவா, நா.பாண்டி, இரா.போஸ், அரியநாச்சி, டெய்லர் பாலகிருஷ்ணன், அக்பர் அலி, உல்லாச கார்த்தி, ஜாகீர், தலைமை கழக பேச்சாளர் எம்.ஜி.பாண்டியன், சொக்கர், கனி, முத்துச்செல்வம், வாழைத்தோப்பு சேகர், ஆட்டோ போஸ், ராமச்சந்திரன், மௌலானா, செந்தில்பாண்டி, நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ.பேசியதாவது :-
          அம்மா பேரவை என்பது கழகத்தின் ராணுவப்படையாகும், அம்மா அவர்கள் எந்த திட்டங்களும், கழகத்தின் சார்பில் தொடங்கினாலும் முதலில் களத்தில் அம்மா பேரவையைத் தான் அனுப்பி களப்பணி ஆற்ற செய்வார்கள். அதன் படியே இன்று அம்மாவின் ஆத்மா வழிகாட்டுதலின் படி ஆட்சி செய்து வரும். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், அம்மா பேரவைக்கு வழங்கிவருகிறார்கள்.
     முதன் முதலாக மதுரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்த அம்மா பேரவைக்குத்தான் வழங்கினார்கள் .தொடர்ந்து அம்மாவின் 70 - வது பிறந்தநாள் விழாவில் 120 ஜோடிகளுக்கு 70 சீர்வரிசைகளுடன் நடைபெற்ற திருமணத்தை அம்மா பேரவைக்கு வழங்கி அந்த திருமணத்தை நடத்தியும் வைத்தார்கள். அதனை மிகச்சிறப்பாக செய்து தமிழகத்தில் அம்மாவின் பெருமையை எடுத்துச்சென்றவர் மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஆவார்.
       வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருமே பிரச்சாரத்தை தொடங்காமல் இருக்கும் போது முதன் முதலில் அம்மா பேரவையின் சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் மாபெரும் தேர்தல் பிரச்சார சைக்கிள் பேரணி மதுரையில் தொடங்கியது. அந்த பேரணியை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், தொடங்கி வைத்து இது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார சைக்கிள் பேரணி என்று நமக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கினார்கள். இதற்கு முதலமைச்சருக்கும், துணைமுதலமைச்சருக்கும், இதனை திறம்பட செயல்படுத்தி வரும் மாநில அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கும் மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் நன்றியனை தெரிவித்துக்கொள்கிறோம். இதில் இரண்டு கட்டங்களில் நடைபெற்ற பிரச்சாரத்தில் இது வரை 47 லட்சம் மக்களிடத்தில் நாம் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளோம்.
       விரைவில் வரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் களப்பணி ஆற்ற தயாராக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாது மதுரை மாநகர் மாவட்டத்தில் உள்ள 76 வார்டுகள் மற்றும் பரவை பேரூராட்சி பகுதிகளில் கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து 1லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது அதற்குரிய பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இவ்வாறு  அவர் பேசினார்.  

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து