ராமேசுவரத்தில் ஆடித்திருவிழா:சுவாமி,அம்மன் மண்டகப்படிக்கு தங்க கேடயத்தில் எழுந்தருளி வீதியுலா.

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
rms kovil news

 ராமேசுவரம்,ஆக,20:    ராமேசுவரம் திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்திருவிழாவை முன்னிட்டு விருந்து வைபவம் நிகழ்ச்சிக்கு கலந்துகொள்வதற்காக தெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு சுவாமி,அம்மன் அலங்காரத்துடன்  தங்க கேடயத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்த நிகழ்ச்சி நடைபெற்றது.
 ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஆடித்திருவிழா ஆகஸ்ட் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் 17 நாட்கள்  நடைபெற்று வந்த இத்திருவிழாவில் முக்கிய திருவிழாவான ஆகஸ்ட் 11 ஆம் தேதி  சுவாமி,அம்மன் மாலைமாற்றுதல் நிகழ்ச்சியும்,அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி சுவாமி,அம்மன் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.இத்திருவிழா நிகழ்ச்சியில் தொடர்ந்து கடைசி நிகழ்ச்சியான ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் விருந்து வைபவம் நிகழ்ச்சி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியையொட்டி   திருக்கோயிலில் அதிகாலை  3 மணிக்கு நடைகள் திறக்கப்பட்டது.பின்னர் 4 முதல் 5 மணி வரை ஸ்படிகலிங்க பூஜைகளும் தொடர்ந்து அதிகாலை 6 மணி வரை அதிகால பூஜைகளும் நடைபெற்றது.அதன் பின்னர்  சுவாமி,அம்மன் திருக்கோயிலிருந்து  8 மணி்க்கு அலங்காரத்துடன் தங்க கேடயத்தில் எழுந்தருளி நடுத்தெரு,திட்டக்குடித்தெரு வீதி வழியாக கெந்தமாதன பர்வதம் பகுதியில் அமைந்துள்ள ராமர் பாதம் கோயில் மண்டகப்படிக்கு  சென்றடைந்தது.அங்கு சுவாமி,அம்மனுக்கு மாவிளக்கு பூஜைகளும்,நெய்வேத்திய பூஜைகளும், சிறப்பு பூஜைகளும்,தீபாராதனையும் நடைபெற்றன.திருக்கோவிலில் சுவாமி,அம்மன் எழுந்தருளி மண்டகப்படிக்கு சென்றடைந்ததையொட்டி திருக்கோவில் நடைகள் அடைக்கப்பட்டன. 

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து