முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் நீரவ் மோடி உறுதி செய்தது இன்டர்போல்

திங்கட்கிழமை, 20 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13500 கோடி மோசடி செய்து விட்டு இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பதை இன்டர்போல் உறுதி செய்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றில் ரூ. 13,500 கோடி மோசடி செய்து விட்டு, இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்று விட்டார்.

அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பதுங்கியிருப்பதாக முதலில் கூறப்பட்டது.

பின்னர் அங்கிருந்து இங்கிலாந்துக்கு வந்து, லண்டனில் அவரது கடை ஒன்றில் தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

 அதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கோரிக்கையின் பேரில் சர்வதேச காவல்துறையான இன்டர்போல் சார்பில் நீரவ் மோடிக்கு எதிராக இருமுறை ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பதை இன்டர்போல் உறுதி செய்துள்ளது.

இங்கிலாந்து அதிகாரிகள் அனுப்பியுள்ள மின்னஞ்சல் மூலம் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நீரவ் மோடியினை நாடு கடத்த இங்கிலாந்திடம் கோரிக்கை வைக்குமாறு மத்திய வெளியுறவுத் துறைக்கு சி.பி.ஐ. வேண்டுகோள் வைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து