சித்துவுக்கு எதிரான விமர்சனங்கள்:பாக். பிரதமர் இம்ரான் பாய்ச்சல்

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      உலகம்
imran khan sidhu2018-08-21

இஸ்லாமாபாத்,சித்துவை குறிவைத்து விமர்சிப்பவர்கள் சமாதானத்திற்கு பெரும் கெடுதி விளைவிப்பவர்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.

கட்டி அணைத்தார்...

சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக, இம்ரான் கான் பதவியேற்ற விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸை சேர்ந்த சுற்றுலாத் துறை அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார்.

அப்போது, பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியை, நவ்ஜோத் சிங் சித்து கட்டி அணைத்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

சித்துவின் இந்த செயலுக்கு, பா.ஜ.,வினர் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தேசத் துரோக வழக்கு

காங்கிரசைச் சேர்ந்த, பஞ்சாப் மாநில முதல்வரும், முன்னாள் ராணுவ தளபதியுமான, அமரீந்தர் சிங், சித்துவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பீகார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு எதிராக, தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமாதானத்திற்கு கெடுதி....

 இந்த நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான்  கூறும் போது பாகிஸ்தானுக்கு வருகை தந்ததற்காக நவ்ஜோத் சிங் சித்துவுக்கு  நன்றி தெரிவித்து கொள்கிறென்.

"இந்தியாவில் சித்துவை குறிவைத்து விமர்சிப்பவர்கள்  சமாதானத்திற்கு பெரும் கெடுதி விளைவிப்பவர்கள் என கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து