முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 30-ம் தேதி கேரள சட்டப் பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட கவர்னருக்கு முதல்வர் பரிந்துரை

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,வரும் 30-ஆம் தேதி கேரள சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட கவர்னருக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பரிந்துரை செய்துள்ளார். 

அதிதீவிர பேரிடர்

கேரளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள மழை-வெள்ள பாதிப்புகளை, தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், கேரளத்தில் கடந்த 10 நாள்களாக பெய்த கனமழையால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளின் தீவிரத்தை கருத்தில்கொண்டு, அதிதீவிர இயற்கைப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கைகள் துவக்கம்

இந்த கன மழையால் 10.28 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். 2.12 லட்சம் பெண்கள் மற்றும் ஒரு லட்சம் குழந்தைகள் இதில் அடங்குவர். இவர்கள் அனைவரும் 3784 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

கேரளத்தில் நேற்று முன்தினம் மழை சற்று ஓய்ந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

வீடிழந்து தவிக்கும் மக்களின் மறுவாழ்வுக்கான பணி அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், தற்போது புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, மக்களை மீண்டும் குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதேபோல், மின் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகத்தை சீர்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைத்து கட்சி கூட்டம்இந்நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்த கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.

திருவனந்தபுரத்தில் நேற்று மாலை 4 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. சாலை சீரமைத்தல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகள் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல இடங்களில் வெள்ள நீர் வடிந்து வருவதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப சென்று, சுத்தம் செய்யத் தொடங்கி உள்ளனர். 

கவர்னருக்கு பரிந்துரை

இதனிடையே மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரணப் பணிகள், மறுவாழ்வு, மறுகட்டமைப்பு குறித்து விவாதிக்கப்பதற்காக வரும் 30-ம் தேதி (வியாழக்கிழமை) கேரள சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

கேரள மக்கள் மற்றும் அரசு சார்பில், ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து