முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தையை காவு வாங்கிய செல்பி மோகம் பறி கொடுத்த தம்பதிகள் கதறல்

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

கரூர்,கரூர் மாவட்டம் என்.சி.சி. நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் தன்வந்த்(4). ஒரு தனியார் பள்ளியில் பிரீ கே.ஜி. வகுப்பு படித்து வந்தான்.

காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை பார்ப்பதற்காக பாபு, அவரது மனைவி ஷோபா மற்றும் மகன் தன்வந்த் ஆகியோருடன் காரில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வாங்கல் ஆற்றுப் பாலத்திற்கு இன்று காலை 9.30 மணிக்கு வந்தார்.

காரை ஓரமாக நிறுத்தி விட்டு வாங்கலாற்று பாலத்தில் வெள்ளம் சீறிப்பாய்வதை பார்த்து மகிழ்ந்தனர்.

வெள்ளத்தோடு சேர்த்து செல்பி எடுப்பதற்காக ஆசைப்பட்ட பாபு, பாலத்தின் தடுப்பு சுவர் ஓரத்தில் நின்று மகனை ஒரு கையில் தூக்கிப் பிடித்தார்.

மற்றொரு கையில் செல்போனில் செல்பி எடுத்தார்.

அப்போது குழந்தை தன்வந்த், திடீரென தடுமாறி ஆற்றுக்குள் விழுந்தான்.

இதைப் பார்த்த பாபு மற்றும் அவரது மனைவி ஷோபா கண்ணீர் விட்டு அய்யோ, அம்மா, எனது மகனை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதனர்.

தங்கள் கண்முன்னே குழந்தை ஆற்றில் அடித்துச் செல்வதை பார்த்து துடிதுடித்தனர்.

அங்கிருந்தவர்களிடம் யாராவது குழந்தையை காப்பாற்றுங்கள் என கெஞ்சினர்.

ஆனால் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் இறங்கி குழந்தையை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து குழந்தையை தேடி வருகிறார்கள்.

வெள்ளம் வரும் முன்பே பொதுமக்கள் யாரும் ஆற்றோரமாக நின்று செல்பி எடுக்க கூடாது என்று அரசு பலமுறை எச்சரித்தும் அதை கண்டுகொள்ளாமல் செல்பி மோகத்தால் தனது குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆறுதல் கூறினர்.

இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து