முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு முதல்வர் - துணை முதல்வர் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, இஸ்லாமிய பெருமக்களுக்கு முதல்வர் இ.பி.எஸ் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

தியாகத் திருவிழா

தியாகத் திருவிழாவாம் பக்ரீத் திருவிழாவைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு, அ.தி.மு.க.வின் சார்பில் இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.  இறைவனுக்கு அஞ்சிய தூய வாழ்வு வாழ்ந்த பெருந்தகை இப்ராஹிம் இறைவன் தனக்கு விடுத்த அழைப்பினை ஏற்று, தனது ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட முன்வந்த உன்னத நாளை நினைவுகூறும் நாள் தான் பக்ரீத் எனப்படும் தியாகத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

உறுதி ஏற்போம்...

இறைவனை அஞ்சி, அவரது கட்டளைக்கு ஏற்ப வாழ்வோர் என்றென்றும் நிறை வாழ்வு பெற்றிருப்பார்கள் என்பது தான் இத்திருநாள் நமக்குக் கூறும் பாடம். போற்றுதலுக்குரிய இப்பெருநாளில், இறைவன் திருவுள்ளத்திற்கு ஏற்ப நாம் அனைவரும் வாழ உறுதி ஏற்போம். அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகுக. இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து