முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை, பெரியார் அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, வைகை, பெரியார் உள்ளிட்ட அணைகளில் இருந்து பாசனத்திற்காக நீரை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

228.86 ஏக்கர் நிலங்கள்

வைகை அணையின் வலதுபுற கரையிலிருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம்பகுதியிலுள்ள கண்மாய்களுக்கு செல்லும் 58 கிராம புதிய கால்வாய்பணி முடிவுற்றதையடுத்து சிறப்பு நிகழ்வாக கருதி சோதனை ஓட்டத்திற்கு தண்ணீர் திறந்துவிட ஆவன செய்யுமாறு எனக்குகோரிக்கைகள் வந்துள்ளன. வைகை அணை 69 அடியை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருவதால் இதனை சிறப்பு நிகழ்வாகக் கருதி 300 மி.க.அடி தண்ணீரை 22-ம் தேதி முதல் முறையாக சோதனை ஓட்டத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட நான்ஆணையிட்டுள்ளேன். இதனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள 228.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெரியாறு அணையில்...

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர்திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்குக்கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர்மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 100 க.அடி வீதம் பாசனத்திற்காக 22-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடநான் ஆணையிட்டுள்ளேன். இதனால், தேனி மாவட்டம், தேனி வட்டம் மற்றும் உத்தமபாளையம்வட்டங்களில் உள்ள 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதைமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

7 நாட்களுக்கு...

தேனி மாவட்டம் 18-ம் கால்வாயினை சுத்தகங்கை ஓடையிலிருந்து கூவலிங்க ஆறு வரை நீட்டித்து கொட்டக்குடி ஆற்றுடன் இணைக்கும் திட்டம் முடிவுற்றதைத் தொடர்ந்து கால்வாய் நீட்டிப்பு திட்டப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து முதல் முறையாக சோதனை ஓட்டம் நடத்துவதற்கு பெரியாறு அணையிருந்து வினாடிக்கு 200 கன அடி வீதம் 7 நாட்களுக்கு 22-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

4,614.25 ஏக்கர்...

தேனிமாவட்டம், 18ம் கால்வாயில் (பழனிவேல் ராஜன் கால்வாய்) பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மாவட்டம்,18ம் கால்வாயின் (பழனிவேல்ராஜன் கால்வாய்) கீழ் உள்ள 4,614.25 ஏக்கர் ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 279 கனஅடி வீதம் 9 நாட்களுக்கு 22ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், தேனி மாவட்டம், 18ம் கால்வாயின் (பழனிவேல் ராஜன்கால்வாய்) கீழ் உள்ள 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப்பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர்மேலாண்மைமேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து