முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டியதில்லை - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அவசியமில்லை

மாசு ஏற்படுத்துவதால் நாடு முழுக்க பட்டாசு வெடிக்கவும், உற்பத்தி செய்யவும் தடை கோரி அர்ஜூன் கோபால் என்பவரால் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு நேற்று தனது பதில் அறிக்கையைத் தாக்கல் செய்தது.  அந்த அறிக்கையில், நாடு முழுக்க பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை.  அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளுக்கு மட்டும் தடை விதிக்கலாம்.

ஊக்கப்படுத்தலாம்

அதிகமாசு ஏற்படுத்தும் பட்டாசுகளையும், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளையும் வெடிக்க தடை விதித்தால் போதுமானது. அவ்வாறு அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தயாரிக்கும் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகளின் உரிமங்களை ரத்து செய்யலாம் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.  மாசு ஏற்படுத்தாத பட்டாசுகள் தயாரிப்பதை ஊக்கப்படுத்தலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து