முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை எழுத முடியாது

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : 10 - ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வை, தனித்தேர்வராக எழுதலாம் என்று விதிமுறை இருந்தது.  இந்நிலையில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-

பிளஸ் 1 தேர்ச்சி கட்டாயம்

தமிழகத்தில் இதுவரை பள்ளி இறுதி பொதுத்தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வை, தனித்தேர்வராக எழுத இயலும் என்ற விதிமுறை இருந்தது.  ஆனால் தற்பொழுது பிளஸ் 1 எனப்படும் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வும் அரசு பொதுத் தேர்வாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது. அவர்கள் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்ற பின்னால்தான் பிளஸ் 2 தேர்வினை எழுத முடியும்.  இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து