சகாயமாதா ஆலய தேர்பவனி விழா

karikudi news

 காரைக்குடி, -காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சகாயமாத திருவுருவக்கொடியை பங்குத்தந்தை எட்வின் ராயன் கொடிஏற்றினார். இதனை தொடர்ந்து பங்குதந்தையர்கள் ஒனாசியஸ் பிரபாகரன், தேவகோட்டை மறைமாவட்ட அதிபர் பாஸ்டின் தலைமையில் திருப்பலி நடந்தது. பிறர் நலனில் அக்கறை கொண்டவள் என்ற மையக்கருத்தில் மறையுரை ஆற்றினர். நவநாட்களில் ஒவ்வொரு நாளும் மாலையில் திருச்செபமாலையும், அதனை தொடர்ந்து திருப்பலியும் நடந்து. இதனை தொடர்ந்து திருவிழா திருப்பலியும், தேர்பவனி, நற்கருணை ஆசிர் நடந்தது. பங்கு தந்தை எட்வின்ராயன் வரவேற்றார். முன்னாள் பங்கு தந்தை வின்சென்ட் அமல்ராஜ், ஆர்.எஸ்.மங்கலம் மறைமாவட்ட அதிபர் கிளமண்ட ராஜா, உதவி பங்குத்தந்தை ஒனாசியஸ் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து