திருமங்கலம் நகரில் நடைபெற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரை:

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      மதுரை
rpu news photo

திருமங்கலம்-மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்த அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் மூன்று ஊராட்சிகளுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் நிர்வாகிகளை நியமனம் செய்து திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது தொடர்பான அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலம் பயணியர் மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சரும் கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலும்,புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் என இதுவரையில் நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்ற தொகுதியாகும்.சிலர் அடுத்து நாங்கள் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று தொண்டர்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி வருகின்றனர்.ஆனால் அ.தி.மு.க கொடி,சின்னம்,கட்சி எங்குள்ளதோ அங்குதான் உண்மையான தொண்டர்கள் இருப்பார்கள்.அவர்கள் நினைப்பது எதும் இங்கு நடக்காது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அம்மாவின் அரசு பல்வேறு சாதனைகளை செய்துள்ளது.எய்ம்ஸ் மருத்துவமனை இங்குள்ள தோப்பூரில் தான் அமையவுள்ளது.அம்மாவுடைய புனித அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி நாம் வெற்றி பெற்றிடவேண்டும்.சிலர் தங்களிடம் 2கோடி தொண்டர்கள் இருப்பதாக பொய்யான தகவல்களை கூறி வருகிறார்கள்.தற்போது நியமிக்கப்பட்டுள்ள மூன்று ஊராட்சிக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் கட்சி நடத்திடும் கூட்டங்களுக்கு அதிகளவு தொண்டர்களை அழைத்து வருவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும்.அம்மா அரசின் சீர்மிகு சாதனைகளால் திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க அமோக வெற்றி வெற்றி பெற்று இரட்டைஇலை அங்கு மலர்வது நிச்சயம் என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,ஓம்கேசந்திரன்,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,மகாலிங்கம்,ராமசாமி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,பேரூர் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,கட்சி நிர்வாகிகள் ஜஹாங்கீர்,சதீஸ்சண்முகம்,எஸ்.எம்.எஸ்.செல்வகுமார்,சுகுமாறன்,சுமதிசாமிநாதன்,அன்னக்கொடி,கண்ணன்,பிரபுசங்கர்,பாவடியான்,தர்மர்,பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து