ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரிக்கு தங்கம் - அபிஷேக்கிற்கு வெண்கலம்

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Sourab Chowk gold win 2018 8 21

ஜகார்த்தா : ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் சவுரப் சவுத்ரிக்கு தங்க பதக்கம் மற்றும் அபிஷேக் வர்மாவிற்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

முதலிடம்

இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.  நேற்று 3-வது நாள் நடந்த துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி 240.7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.  அவருக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது.  அவருக்கு அடுத்து ஜப்பானின் டோமோயுகி மட்சுடா 2வது இடம் பிடித்துள்ளார். 219.3 புள்ளிகள் பெற்ற அபிஷேக் வர்மாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.  அவர் வெண்கல பதக்கம் வென்றார். போட்டியின் 4வது வெளியேற்றுதல் சுற்றின் முடிவில் சவுரப் 180 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், அபிஷேக் 178.9 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் இருந்தனர்.

6-வது இடத்தில்...

இந்த நிலையில், இன்று நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றதனால் இந்தியாவுக்கு 3வது தங்க பதக்கம் கிடைத்துள்ளது. பதக்கப்பட்டியலில் சீனா 15 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என்று மொத்தம் 36 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. ஜப்பான் 8 தங்கம் உள்பட 30 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9பதக்கங்களுடன் 6-வது இடத்தில் உள்ளது.

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Thai month festival spl - 2019 | விளம்பி வருடம் தை மாதம் பண்டிகைகளின் சிறப்பு

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து