முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாமீன் கொடுக்க கோர்ட் மறுப்பு - பக்ரீத் பண்டிகையை சிறையில் கொண்டாடிய நவாஸ் ஷெரீப்

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பக்ரீத் பண்டிகையையொட்டி தமக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

இதையடுத்து, பக்ரீத் பண்டிகையை நவாஸ் ஷெரீப் சிறையிலிருந்தபடி கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:-

பனாமா ஊழல் வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பக்ரீத்தைக் கொண்டாடுவதற்காக தமக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அதன் மீதான முடிவை ஒத்திவைத்தனர்.

இதையடுத்து, பக்ரீத் பண்டிகையின்போது ராவல்பிண்டியிலுள்ள அடியாலா சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை நவாஸ் ஷெரீபுக்கு ஏற்பட்டுள்ளது. இதே வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸின் மகள் மரியம் நவாஸ், மருமகன் முகமது சப்தார் ஆகியோரும் பக்ரீத் பண்டிகையின் போது அடிலாலா சிறையில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து