ரூ.1.5 லட்சம் கோடி சீன திட்டங்கள் ரத்து: மலேசிய பிரதமர் அறிவிப்பு

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018      உலகம்
Malaysian PM 2018 8 22

பெய்ஜிங் : சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான சீன திட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தெரிவித் துள்ளார்.

சீனாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுடன் சாலை, ரயில், கடல் வழி போக்குவரத்தை ஏற்படுத்தும் ஒரே மண்டலம், ஒரே பாதை என்ற கனவு திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள குவாதரில் பிரம்மாண்ட துறை முகத்தை சீனா கட்டியுள்ளது. சீனாவில் இருந்து குவாதருக்கு நெடுஞ்சாலையையும் அமைத்துள்ளது. இந்த நெடுஞ்சாலை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதால் இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.

ஒரே மண்டலம், ஒரே பாதை’ திட்டத்தில் மலேசியாவில் சுமார் ரூ.1.53 லட்சம் கோடி செலவில் ரயில், எண்ணெய் குழாய் திட்டங்களைச் செயல்படுத்த சீனா ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் காலத்தில் கையெழுத்தானது. கடந்த மே மாதம் மலேசியா வின் புதிய பிரதமராக மகாதீர் முகமது பதவியேற்றார். சீனாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற் கொண்ட அவர், அந்த நாட்டு தலைநகர் பெய்ஜிங்கில் மலேசிய நிருபர்களிடம்  கூறியதாவது:

ஒரே மண்டலம், ஒரே பாதை திட்டத்தில் மலேசிய தலைநகர் கோலாலம்பூர், தாய்லாந்தை இணைக்கும் ரயில் பாதை, 2 எண்ணெய் குழாய் திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந் தது. இந்த திட்டங்கள் மலேசியாவுக்கு தேவையில்லை.

சீன நிதியுதவியுடன் இந்த திட்டங்களைச் செயல்படுத்தினால் மலேசியாவுக்கு பெரும் கடன் சுமை நேரிடும். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே ரயில் பாதை, எண்ணெய் குழாய் திட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து