முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெனிசுலாவில் பயங்கர நிலநடுக்கம் - 7.3 ரிக்டராக பதிவு: பீதியில் மக்கள்

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

கராகஸ் : வெனிசுலாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

வெனிசூலாவின் வடமேற்கே யகுவாரேபரோ என்ற பகுதிக்கு 20 கிலோ மீட்டர்கள் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் 126 கிலோ மீட்டர்கள் ஆழத்தில் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் குமணா நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மின் படிக்கட்டுகள் கீழே சரிந்து விழுந்தன. இதனால் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலம்பியாவின் தலைநகர் பொகட்டாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் சேதங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து