தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்: அமெரிக்கா

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018      உலகம்
US accusation 2018 8 22

வாஷிங்டன் : தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குகிறது என்று அமெரிக்கா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி அலிஸ் வெல்ஸ் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான், அண்டை நாடுகளுடன் நல் லுறவை பேணுவேன் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அவரோடு இணைந்து பணியாற்ற அமெரிக்கா விரும்புகிறது. அதே நேரம் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக் களால் ஆப்கானிஸ்தானின் உள் நாட்டுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.

இன்றளவும் தீவிரவாதிகளின் புகலிடமாகவே பாகிஸ்தான் விளங்குகிறது. தலிபான்களின் முக்கிய பிரிவான ஹக்கானி நெட்வொர்க் பாகிஸ்தான் மண்ணில் செயல்படுகிறது. அந்த அமைப்பு உட்பட அனைத்து தீவிரவாத குழுக்கள் மீதும் பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்காக இந்திய தரப்பில் சுமார் ரூ.20,945 கோடி அளவுக்கு நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு வேறு எந்த நாடும் உதவி செய்யவில்லை. அதற்காக இந்தியாவை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து