ஓரிரு இடங்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
rain chance chennai 2018 6 16

சென்னை : வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

26-ம் தேதி வரை...

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உள்மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 26-ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு...

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 26-ம் தேதி தொலைதூரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து