சி.பி.எல். 2018: பொல்லார்டு அணியை 69 ரன்னில் சுருட்டி கெய்ல் அணி வெற்றி

புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
gayle team won 2018 8 22

கரீபியன் : கரிபியன் பிரீமியர் லீக்கில் பொல்லார்டு அணியை 69 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றி பெற்றது கிறிஸ் கெய்ல் அணி.

பந்து வீச்சு தேர்வு

கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் செயின்ட் லூசியாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் - கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கிறிஸ் கெய்ல் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி களம் இறங்கியது. செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பொல்லார்டு அணி 12.3 ஓவர்கள் மட்டுமே விளையாடி 69 ரன்னில் சுருண்டது.

5 தோல்விகளுடன்...

செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் ஷெல்டன் காட்ரெல் 3 விக்கெட்டும், மெஹ்முதுல்லா, சந்தீப் லாமிச்சேன் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். பின்னர் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் 7.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தல் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் செயின்ட் லூசியா 6 போட்டியில் ஒரு வெற்றி, 5 தோல்விகளுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து