முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெனிசுலா, அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,வெனிசுலாவின் வடகிழக்குப் பகுதி மற்றும் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

வெனிசுலாவின் யாகுரபாரோ பகுதிக்கு 20 கி.மீ. வடமேற்கே, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில், இந்நிலநடுக்கம் 7.3 ஆக பதிவானது.

இதையடுத்து கடும் அச்சமடைந்த மக்கள், வீட்டை விட்டு வெளியேறி, வீதியில் கூடினர். நிலநடுக்கத்தின் காரணமாக, குமானா நகரத்திலுள்ள வணிக நிறுவனம் ஒன்றில், நகரும் படிக்கட்டு இடிந்து விழுந்ததில் சிலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், நிலநடுக்கத்தினால் பெரிய விபத்துகள் எதுவும் நேரவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 1997-ஆம் ஆண்டு, இதே அளவில் கராகஸ் பகுதிக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் ஒரேகான் பகுதிக்கு 264 கி.மீ. மேற்கே, 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால், மக்களுக்கோ, கட்டிடங்களுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை என காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து