பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு:சபரிமலை கோயில் காலவரையின்றி மூடல்

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2018      ஆன்மிகம்
pamba 2018-08-23

சபரிமலா,பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு வடியாததால், அடுத்த அறிவிப்பு வரும்வரை சபரிமலை ஐயப்பன் கோயில் காலவரையின்றி மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக கேரள மாநிலம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது.

இழப்பை சரிசெய்ய ரூ.2,500 கோடி ஆகும் என அரசு மதிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின் றனர். இயல்பு வாழ்க்கைக்கு இப்போதுதான் மக்கள் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் வரலாறு காணாத வெள்ளத்தால் சபரிமலை ஐயப்பன் கோயிலும் கடும் சேதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

கோயில் உள்கட்டமைப்பை சீர்படுத்த சுமார் நூறு கோடி ரூபாய் வரை செலவாகும் எனக் கூறப்படுகிறது.

இதனால் கடந்த 13 அன்று கோயில் மூடப்பட்டது.

பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் சபரிமலை ஐயப்பன் கோயில் அடுத்த அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.

இதுபற்றி திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறும்போது, ‘சபரிகிரி திட்டத்தின் ஒரு பகுதியான இரண்டு அணைகளின் மதகுகளும் திறக்கப்பட்டுள்ளதால் கோயிலை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.

இருந்தாலும் மற்ற அனைத்து பூஜைகளும் தொடர்ந்து நடக்கும்’ என்றார்.

பம்பை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாலத்தை கடந்த பக்தர்களால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், அங்குள்ள கடைகள், விடுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பம்பை நதியின் போக்கே மாறிவிட்டது.

அதனால் தான் பக்தர்கள் வரவேண்டாம் என்று கோயில் நிர்வாகம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து