ஓணம் பண்டிகைக்காக திண்டுக்கல்லில் சாகுபடி செய்யப்படும் வாடாமல்லி பூக்கள்

வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2018      திண்டுக்கல்
dgl news

திண்டுக்கல்-கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்காக திண்டுக்கல்லில் அதிக அளவு ஏக்கர்களில் வாடாமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கொண்டாடப்படும் முதன்மையான பண்டிகை ஓணம் திருவிழா. இவ்வருடத்திற்கான ஓணம் வரும் 25ம் தேதி வருகிறது. திருவிழாவிற்கு 10 நாள் முன்னதாகவே அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்கள், கோயில்களில் ஓணம் களைகட்டி விடும். ஆனால் இந்த வருடம் கேரளாவில் புரட்டிப்போட்ட மழையால் அரசு சார்பில் கொண்டாடப்பட இருந்த ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டது.
ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சமே அத்தப் பூ கோலமிட்டு மகிழ்வதாகும். அதற்காக திண்டுக்கல்லில் இருந்து செவ்வந்தி, கோழிக்கொண்டை, வாடாமல்லி உள்ளிட்ட மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தினசரி 10 டன் அளவிற்கு திண்டுக்கல்  பூ மார்க்கெட்டில் இருந்து கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வருடம் மழைவெள்ளம் காரணமாக கேரள வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக  பூக்களை கொண்டு வந்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் அதனை குப்பையில் வீசிச் சென்றனர். குறிப்பாக வாடாமல்லி  பூக்கள் ஒரு கிலோ ரூ.2க்கு வாங்கப்பட்டது. இதனால் அதனை பயிரிட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது மழை நின்று விட்டதால் கேரள வியாபாரிகள் திண்டுக்கல்  பூ மார்க்கெட்டிற்கு வரத்தொடங்கியுள்ளனர். வாடாமல்லி  பூக்கள் மட்டும் 5 டன் அளவிற்கு வாங்கிச் சென்றனர். ஓணம் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் மேலும் பல வியாபாரிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால்  பூக்களின் விலையும் அதிகமாக கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை வாங்கப்பட்டது.
எனவே திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்  பூக்கள் பயிரிட்ட விவசாயிகள் அதனை  பூ மார்க்கெட்டிற்கு அதிகமாக கொண்டு வரத் தொடங்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து