முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை பதவியில் இருந்து நீக்கினால்? அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், என்னை பதவியில் இருந்து நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சரியும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2016 நவம்பர் 8-ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் மீது நடிகைகள் ஸ்ட்ரோமி டேனியல்ஸ், கெரன் மெக்டக்கால் ஆகியோர் பாலியல் புகார் தெரிவித்தனர். இரு நடிகைகளும் டிரம்புக்கு எதிராக பொதுஅரங்கில் பேசாமல் இருப்பதற்கு டிரம்பின் அப்போதைய வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் பெரும் தொகையை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது தன் மீதான குற்றச்சாட்டை கோஹன் ஒப்புக் கொண்டார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு என்பதால் மைக்கேல் கோஹனுக்கு 65 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிபர் டிரம்புக்கு அரசியல்ரீதியாக பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழுந்து வருகின்றது.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், ஒருவர் சிறப்பான முறையில் பணி செய்து கொண்டிருக்கும் போது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியவில்லை. என்னை பதவியில் இருந்து நீக்கினால் அமெரிக்காவில் பெரிய அளவு பொருளாதாரம் சீர்குலையும். அனைவரும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து