காணாமல் போன கதிரியக்க இரிடிய மூலக்கூறு சாதனம்: மலேசிய போலீசார் தீவிர விசாரணை

வெள்ளிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2018      உலகம்
iridium 2018 08 24

கோலாலம்பூர், மலேசியாவில் 23 கிலோ எடை கொண்ட மிக சக்திவாய்ந்த கதிரியக்க சாதனம் ஒன்று காணாமல் போய் உள்ளது. இந்த சாதனம் முழுக்க முழுக்க இரிடியம் எனப்படும் கதிரியக்க மூலக்கூறு இருப்பதாக மலேசியா கூறியுள்ளது. இது குறித்து மலேசிய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்சாரம் தயாரிக்கவும், எரிபொருள் தயாரிக்கவும் இந்த சாதனம் பயன்படுத்தப்படும். இதில் இருக்கும் இரிடியம் வற்றாத கதிரியக்க பொருள் ஆகும். இதை வைத்து அணுகுண்டும் தயாரிக்கலாம். இந்த சாதனத்தை, கோலாலம்பூரில் இருந்து சேரேம்பென் நகரில் உள்ள அலுவலகத்திற்கு சோதனைக்காக இரவோடு இரவாக இடமாற்றம் செய்ய இரண்டு டிரைவர்கள், பெரிய டிரக்கின் பின்புறம் வைத்து கொண்டு சென்று இருக்கிறார்கள்.

ஆனால், அலுவலகத்தில் சென்று பார்த்த போது, டிரக்கின் உள் இருந்த கதிரியக்க சாதனம் காணாமல் போய் உள்ளது. இதில் இருக்கும் இரிடியமை தனியாக எடுத்து, சில மாற்றங்கள் செய்து வேறு சில பொருட்களை சேர்த்து அணு ஆயுதமாக பயன்படுத்தலாம் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். இது தீவிரவாதிகள் கைக்கு சென்று இருக்கலாமோ என்று அச்சம் எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து மலேசிய போலீஸ் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த இரண்டு டிரைவர்களும் முதலில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள், நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உண்மையில் யார்தான் இதை திருடியது என்ற கேள்வி எழும்பி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து