முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் கூட்டுறவு நகர வங்கியின் தலைவராக அ.தி.மு.க நகர் செயலாளர் ஜே.டி.விஜயன் பதவியேற்பு: கட்சி நிர்வாகிகள் வாழ்த்து:

வெள்ளிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் கூட்டுறவு நகர வங்கிக்கு நடைபெற்ற தலைவர் தேர்தலில் அ.தி.மு.க நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு வங்கியின் தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.இதையடுத்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து தலைவராக பெறுப்பேற்றுக் கொண்ட ஜே.டி.விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அண்மையில் திருமங்கலம் கூட்டுறவு நகரவங்கிக்கு நடைபெற்ற நிர்வாகக்குழு இயக்குனர்களுக்கான தேர்தலில் நகர்கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன் தலைமையில் போட்டியிட்ட அணியினைச் சேர்ந்த 11 வேட்பாளர்களும் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டிடிவிதினகரன் அணியினைச் சேர்ந்த வேட்பாளர்களை படுதோல்வியடையச் செய்தனர்.இதனை தொடர்ந்து  திருமங்கலம் கூட்டுறவு நகர வங்கியின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல்,வங்கியின் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது.அப்போது தேர்தல் அலுவலராக எஸ்.சீனியப்பா செயல்பட்டார். அப்போது திருமங்கலம் கூட்டுறவு நகர   வங்கியின் தலைவர் பதவிக்கு திருமங்கலம் அ.தி.மு.க நகர்கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.இவரை எதிர்த்து வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஜே.டி.விஜயன் வங்கியின் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து வங்கி அதிகாரிகள் முன்னிலையில் அவர் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் துணைத்தலைவராக அ.தி.மு.க நகர அவைத்தலைவர் ஜஹாங்கீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.வங்கியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க நகர்கழகச் செயலாளர் ஜே.டி.விஜயனுக்கு துணைத்தலைவர் ஜஹாங்கீர்,வங்கி இயக்குனர்களான இந்திராணி,முருகேஸ்வரி,ராதா, காளிதாஸ்,மனோகரன்,நாகேந்திரன்,ராஜாஉசேன்,செந்தில்குமார்,சுரேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள்,வங்கி அலுவலர்கள்,பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.திருமங்கலம் கூட்டுறவு நகர வங்கியின் தலைவராக திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன் இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து