வடகொரியா பயணத்தை ரத்து செய்ய அமைச்சருக்கு டிரம்ப் திடீர் உத்தரவு

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      உலகம்
trump 2017 12 31

வாஷிங்டன்,அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாப்பியோவின் வடகொரியா பயணத்தை அந்நாட்டு அதிபர் டிரம்ப் ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

 வெளியுறவுத் துறை அமைச்சரின் வடகொரிய பயணத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அணு ஆயுத சோதனைகளை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் வடகொரியாவுடன் போதுமான அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என்று அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இவ்விகாரத்தில் மேலும் சீனா - வடகொரியாவுக்கு மறைமுகமாக உதவுவதாகவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றம் சுமத்தி இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து