முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.தேர்தலுக்காக குழு ராகுல் காந்தி அறிவிப்பு சிதம்பரத்திற்கு முக்கிய இடம்

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் குழுவை அக்கட்சியின் தலைவர்  ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி துரித கதியில் தயாராகி வருகிறது என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.

9 பேர் கொண்ட மையக்குழு, 19 பேர் கொண்ட தேர்தல் அறிக்கைக்குழு அமைப்பு, 13 பேர் கொண்ட விளம்பரக் குழுவாக இது அமைக்கப்பட்டுள்ளது. 9 பேர் கொண்ட மையக்குழுவில், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், அசோக் கெலாட், மல்லிகார்ஜுன கார்கே, அகமது பட்டேல், ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுஜெவாலா மற்றும் வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தேர்தல் அறிக்கை குழுவிலும் ப.சிதம்பரத்திற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து