முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூப்பர் டூப்பரான படத்தில் துருவா, இந்துஜா

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      சினிமா
Image Unavailable

ஆண்மை தவறேல் துருவாவும், மேயாத மான் இந்துஜாவும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘சூப்பர் டூப்பர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இது ஒரு முழு நீள பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது. இப்படத்தை இயக்கும் அருண் கார்த்திக் குறும்படவுலகில் முத்திரை பதித்தவர். இவரது 'லேகா' பரவலான கவனம் பெற்ற படமாகும். படத்தின் நாயகனாக துருவா நடிக்கிறார். இவர் 'ஆண்மை தவறேல்' படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக மேயாத மான் புகழ் இந்துஜா நடிக்கிறார்.படம் பற்றி இயக்குனர் அருண் கார்த்திக் கூறும்போது, "இந்தப் படம் எல்லாரும் ரசிக்கும் படி இருக்கும். இது வழக்கமான கதை கொண்ட படமல்ல என்பதைப் புரிந்துதான் நாயகன், நாயகி இருவருமே நடிக்க ஒப்புக் கொண்டார்கள். இதில் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் ஆதித்யா முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகிறார். ஒரு ரகளையான கதாபாத்திரத்தில் ஷாரா நடிக்கிறார். இவர் 'மீசையை முறுக்கு', 'இருட்டறையில் முரட்டுக்குத்து' , படங்களில் நடித்தவர். அது மட்டுமல்ல சமூக ஊடகங்களிலும் பிரபலமானவர். இப்படி சமூக ஊடகங்களில் புகழ் பெற்ற பலரும் இதில் நடிக்கிறார்கள்" என்றார். சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு திவாகரா தியாகராஜன் இசையமைக்கிறார். இன்று தொடங்கி படப்பிடிப்பை தொடர்ந்து 45 நாட்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து