3 வகை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது:இந்திய அணி நவம்பரில் ஆஸ்திரேலியா பயணம்

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
indian deem 2018-08-25

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது. இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

சுற்றுப்பயணம்...

இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது. ஜனவரி மாதம் வரை அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

நவம்பர் 21-ம் தேதி போட்டிகள் தொடங்குகிறது. ஜனவரி 18-ம் தேதியுடன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிகிறது.

டெஸ்ட் போட்டி...

டி-20 போட்டிகள் முதலில் நடக்கிறது. நவம்பர் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 20 ஓவர் போட்டிகள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து டிசம்பர் 6-ம் தேதி டெஸ்ட் போட்டிகள் தொடங்கி ஜனவரி 3-ம் தேதியுடன் முடிகிறது. ஒருநாள் தொடர் ஜனவரி 12-ம் தேதி தொடங்குகிறது.

உலகக்கோப்பை...

இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு ஆஸ்திரேலிய பயணம் பயன் உள்ளதாக அமையும். 2014-15ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா பயணத்தில் டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது.

2015-16ல் ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர்களில் இந்திய அணி பங்கேற்றது. 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.

இந்திய அணியின் சுற்றுப்பயணம் விவரம்:-

டி-20 போட்டி:

1) நவம் 21: முதல் 20 ஓவர் போட்டி (பிரிஸ்பேன்).
2) நவம் 23: 2-வது 20 ஓவர் (மெல்போர்ன்).
3) நவம் 25: கடைசி 20 ஓவர் (சிட்னி).

டெஸ்ட் போட்டி:

1) டிசம் 6-10: முதல் டெஸ்ட் (அடிலெய்ட்).
2) டிசம் 14-18: 2-வது டெஸ்ட் (பெர்த்).
3) டிசம் 26-30: 3-வது டெஸ்ட் (மெல்போர்ன்).
4) ஜனவரி 3-7: கடைசி டெஸ்ட் (சிட்னி).

ஒருநாள் போட்டி:

1) ஜனவரி 12: முதல் ஒருநாள் போட்டி (சிட்னி).
2) ஜனவரி 15: 2-வது ஒருநாள் போட்டி (அடிலெய்ட்).
3) ஜனவரி 18: கடைசி 3-வது ஒருநாள் போட்டி (மெல்போர்ன்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து