பேட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Saina Nehwal 2018 1 25

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன.

இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், இந்தோனேசிய வீராங்கனை பிட்ரியானியை எதிர்கொண்டார்.

துவக்கத்தில் இருந்தே ஆட்டத்தை சாய்னா தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். முதல் செட்டை 21-6 என எளிதாக கைப்பற்றிய சாய்னா, 2வது செட்டை சற்று போராடி 21-14 என்ற கணக்கில் வென்றார். 31 நிமிடங்களில் 2-0 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்ற சாய்னா, காலிறுதியை உறுதி செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து