வியட்நாம், கம்போடியா நாடுகளில் சுஷ்மா சுவராஜ் மூன்று நாள் சுற்றுப்பயணம்

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      இந்தியா
sushma swaraj 2016 06 12

புதுடெல்லி,கம்போடியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரும் நாளை முதல் 30-ம் தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஆசியான் அமைப்பில் உள்ள நேசநாடான வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் பாம் பின் மின் தலைமையிலான இந்தியா - வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் நாளை வியட்நாம் நாட்டுக்கு பயணமாகிறார்.

இந்த பயணத்தின்போது,  இருநாட்கள்  வியட்நாமில் தங்கியிருக்கும் சுஷ்மா, இந்திய பெருங்கடல்சார்ந்த மாநாட்டின் மூன்றாவது அமர்வை தொடங்கி வைக்கிறார். வியட்நாம் பிரதமர்  நுகுயென் க்சுவான் ஃபுக்-ஐயும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

அங்கிருந்து 29-ம் தேதி கம்போடியா நாட்டுக்கு செல்லும் அவர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிராக் சோக்ஹான், கம்போடியா பிரதமர் ஹூன் சென் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் சேய் சும் ஆகியோரை சந்தித்து இந்தியா - கம்போடியா இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து