அமெரிக்க செனட் உறுப்பினர் ஜான் மெக்கெயின் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      உலகம்
John McCain2018-08-26

நியூயார்க், வியட்நாம் போரில் சிறை சென்றவரும், அமெரிக்க அதிபர் பதவிக்கு இருமுறை போட்டியிட்டவரும், அரிசோனா மாநில செனட் உறுப்பினருமான ஜான் மெக்கெயின் உடல்நலக்குறைவால் நேற்றுகாலமானார்.அவருக்கு வயது 81

ஜான் மெக்கெயினுக்கு மூளைப் புற்றுநோயான கிளிபோஸ்டோமா எனும் நோய் இருப்பது கடந்த 2017-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.28 மணிக்கு அவர் காலமானார்.

இது குறித்து மெக்கெயின் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரிசோனா மாநில செனட் உறுப்பினர் ஜான் மெக்கெயின் மூளைப் புற்றுநோயால் நேற்று மாலை 4.28 மணிக்குக் காலமானார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை நிறுத்தப்பட்டிருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தினர். மெக்கெயினுக்கு மகனும், பேரன்கள் உள்ளனர்.

அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான போரின்போது, வியட்நாம் ராணுவ அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட கடற்படை அதிகாரியான மெக்கெயின் 5 ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எனது ஆழமான வருத்தங்களையும், மரியாதைகளையும் செனட்டர் மெக்கெயின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கிறேன்.

என்னுடைய அன்பும், பிரார்த்தனைகளும் உங்களுக்காக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து